பிரபல சாமியார் நித்தியானந்தா வெளிநாடு தப்பி .ஓட்டம்.!

Breaking News

header ads

பிரபல சாமியார் நித்தியானந்தா வெளிநாடு தப்பி .ஓட்டம்.!



சாமியார் நித்யானந்தா இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டதாக குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆகமதாபாத்தில் உள்ள தமது ஆசிரமத்தில் இரண்டு பெண்சீடர்களை சட்டவிரோதமாக பலவந்தப்படுத்தி நித்யானந்தா அடைத்து வைத்திருப்பதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். பிரானபிரியா , பிரியாத்தவதா ஆகிய இரண்டு பெண் சீடர்களை கைது செய்த போலீசார் ஆசிரமத்தில் இருந்த குழந்தைகள், பெண்களை மீட்டு ,நித்யானந்தாவை தேடி வந்தனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஆகமதாபாத் எஸ்.பி. ஆர்.வி.ஆசாரி, நாட்டைவிட்டு தப்பிக் சென்ற நித்யானந்தாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கர்நாடக அரசு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் குஜராத் தனிப்படை போலீசாரும் நித்யானந்தாவைத் தேடி வருகின்றனர்.

Post a Comment

0 Comments