திரையரங்குகளில் திரையிடப்படும் படத்தின் பெயர் வருவதற்கு முன்பு, திருக்குறள் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆயிரத்து 43 பயனாளிகளுக்கு 3 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கெனவே, திரைப்படங்களில் படத்தின் பெயர் இடம்பெறுவதற்கு முன்பு திருக்குறள் இடம்பெற்றதாகவும், இந்த திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.



0 Comments