கொல்கத்தாவில் இன்று இந்தியா- வங்கதேசம் இடையேயான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக தொடங்குகிறது. இந்திய அணி பங்கேற்கும் முதலாவது பகல்- இரவு போட்டியாகும்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அரசியல் பிரபலங்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் இப்போட்டியைக் காண வருகை தரவுள்ளனர்.
பிங் நிற பந்து பயன்படுத்தப்படவுள்ளதால், போட்டி நடக்கும் அரங்கம் மட்டுமல்லாது, கொல்கத்தாவின் சில முக்கிய இடங்களும்கூட பிங்க் நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிஜொலிக்கின்றன.இது பார்ப்பதற்கு பிங்க் நிற தீவு போல் காட்சியளிக்கிறது.
முதல் பகலிரவு ஆட்டம் என்பதால் இந்திய அணியைப் போலவே, இந்திய ரசிகர்கள் இடையேயும் இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



0 Comments