வங்கதேசத்தை தெறிக்க விட்ட இந்தியா ..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Breaking News

header ads

வங்கதேசத்தை தெறிக்க விட்ட இந்தியா ..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!



இந்தியா , வங்கதேச கிரிக்கெட் அணிகள் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி, கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் விளையாடிய வங்கதேசம், முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்களில் சுருண்டது.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 347 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 136 ரன்களும், புஜாரா 55 ரன்களும், ரஹானே 51 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம், ஆரம்பம் முதலே திணறியது. 13 ரன்களை எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை அந்த அணி இழந்துவிட்டது. தொடக்க ஆட்டக்காரர் சாத்மான் இஸ்லாம், மொமினுல் ஹேக் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகினர். இம்ருல் கயேஸ் 5 ரன்னிலும், முகம்மது மிதுன் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இதன்பின்னர் முஸ்பிஹர் ரஹிம் நிலைத்து நின்று 74 ரன்களும், மகமதுல்லா 39 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறியதால், வங்கதேசம் 195 ரன்களில் 2ஆவது இன்னிங்சில் சுருண்டது. அதிகப்பட்சமாக உமேஷ் யாதவ் 5 விக்கெட்டுகளும், இசாந்த் ஷர்மா 4 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

இதன்மூலம் 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது. அதேபோல் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரையும் 2க்கு பூஜ்யம் என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருது இசாந்த் ஷர்மாவுக்கு வழங்கப்பட்டது.

கொல்கத்தாவில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் டெஸ்ட் போட்டித் தொடரை 2க்கு பூஜ்யம் என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

Post a Comment

0 Comments