தஞ்சை பெரிய கோயிலில் ஆட்சியர் ஆய்வு..!

Breaking News

header ads

தஞ்சை பெரிய கோயிலில் ஆட்சியர் ஆய்வு..!



தஞ்சாவூர் நவ.22-
கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள தஞ்சை பெரிய கோயில் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் நடைபெறும் இடங்களில் தஞ்சை மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள ம.கோவிந்தராவ் வியாழக்கிழமை அன்று ஆய்வு நடத்தினார்.

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும்,
வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த கோவிலில் 1996ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் 24 ஆண்டுகளுக்குப்பிறகு அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாகவே தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அதன்படி தொல்லியில் துறை சார்பில் பெரியகோவிலில் உள்ள கோபுரங்கள் சுத்தப்படுத்தும் பணி, புல்வெளி சீரமைப்பு, கல்தளம் பதிக்கும் பணி, கோவில் வளாகத்தில் சிதிலமடைந்த தரைத்தளம் சீரமைக்கும் பணி, திருச்சுற்று
மண்டபங்கள் சீரமைக்கும் பணிகள் போன்றவை மேற்கொள்ளப்பட்டன.

அதைத்தொடர்ந்து பெரியகோவில் விமானகோபுரம் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டன. அடுத்த கட்டமாக முருகன் சன்னதியில் உள்ள கோபுரம், விநாயகர் கோபுரங்கள் சுத்தப்படுத்தப்பட்டன. இதர பணிகளும் நடைபெற்று
வருகின்றன. தற்போது பிப்ரவரி 5 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

இதற்காக யாகாசலை நடைபெறும் இடங்கள், பொதுமக்கள் கோவிலுக்குள் வந்து
செல்வதற்கான அமைக்கும் பாதை, முக்கிய பிரமுகர்கள் வரும் வழி ஆகியவை குறித்து ஆட்சியர் ம.கோவிந்தராவ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கோவிலை சுற்றி வலம் வந்து செய்யப்படும் பாதுகாப்பு
ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். 

தொடர்ந்து, தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள கல்லணை கால்வாய் பூங்கா மற்றும் நடைபாதை, சிவகங்கை பூங்கா, பெத்தண்ணா கலையரங்கம் ஆகிய இடங்களில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு பணிகளின் முன்னேற்றம் குறித்தும் தற்போது பணிகள் நிலை குறித்தும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து மீனாட்சி, தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி, தஞ்சாவூர் நகர்நல அலுவலர் நமச்சிவாயம், தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments