பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி கும்மியடித்து நூதன ஆர்ப்பாட்டம்
பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் தேசிய விவசாயிகள் சங்கம் சார்பில் கும்மியடித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரெங்கநாயகலு தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் பரமேஸ்வரன், லட்சுமிபுரம் கூட்டுறவு சங்க தலைவர் முருகன், இயற்கை விவசாய சங்க மாவட்ட தலைவர் கருப்பசாமி, தேசிய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் காசிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆடு வளர்ப்போர் சங்க தலைவர் கருப்பசாமி மற்றும் நிர்வாகிகள் காளிமுத்து, மாரியப்பன், அய்யாச்சாமி, மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, கும்மியடித்தபடியே 2018-19ம் ஆண்டிற்குரிய பயிர் காப்பீட்டிற்கான இழப்பீட்டு தொகையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்


0 Comments