உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து வருகிறது சில கட்சிகள்..! அமைச்சர் கடம்பூர் ராஜு...

Breaking News

header ads

உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து வருகிறது சில கட்சிகள்..! அமைச்சர் கடம்பூர் ராஜு...


தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளதாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு பேட்டி.

தூத்துக்குடியில் நடைபெற்ற 66வது கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்  சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு வங்கிகள்,கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கு கேடயங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் 957 பயனாளிகளுக்கு 6 கோடியே 21 லட்சம் ரூபாய் கடன் உதவிகளை வழங்கினார். 

தொடர்ந்து பேசிய அவர், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடந்த எட்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு 740 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 75 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்கிகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள பிரதமர் ஜன் தன் யோஜனா உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகள், மகளீர்கள், பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் என அனைத்து மக்களுக்கும் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கீழ் அனைத்து கூட்டுறவு அமைப்புகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்றார். கூட்டுறவுத்துறையில் தொடர்ந்து தமிழகம் முன்னிலையில் இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். அனைத்துதுறைகளையும் ஒருங்கிணைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் கூட்டுறவு துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் முதலமைச்சர் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். அதிமுக தலைமையில் வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் நீடித்ததாக சரித்திரம் இல்லை. திமுக தேர்தலை கண்டு பயப்படுகிறது. அதன் காரணமாகவே அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது புகார் அளிக்கின்றனர். தமிழகத்தில் நம்பர் ஒன் கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. நான்குநேரி,விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பதிவான வாக்குகளில் 60 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ள கட்சி அதிமுக என்றார். 

திமுக  கூட்டணியில்   சலசலப்பு உள்ளது எனவே வரும் உள்ளாட்சி தேர்தலில் அங்குள்ள கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது என்றார். முன்னதாக நிகழ்ச்சியில்  சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகநாதன், சின்னப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments