ரயிலை பிடிக்க அவசர உதவி சேவைக்கு போன் செய்த பெண்!என்னம்மா... இப்படி பண்ணுறீங்களேம்மா!

Breaking News

header ads

ரயிலை பிடிக்க அவசர உதவி சேவைக்கு போன் செய்த பெண்!என்னம்மா... இப்படி பண்ணுறீங்களேம்மா!


கனடா: ரயிலை பிடிக்க வேண்டும் என்று அவசர உதவி சேவைக்கு போன் செய்துள்ளார் பெண் ஒருவர்.


உலகத்தின் அனைத்து நாட்டிலும் அவசர உதவிக்காக அழைப்பதற்கென்று ஒரு எண் கொடுக்கப்பட்டிருக்கும். அவசர உதவி என்றால், ஒருவர் எதிர்பாராவிதமாக ஆபத்து ஒன்றில் சிக்கிக் கொண்டாலோ, ஒரு குற்றச்செயல் நடைபெற இருக்கிறது என்றாலோ உடனடியாக மருத்துவ உதவி அல்லது வேறு இன்றியமையா உதவி தேவைப்பட்டாலோ அது போன்ற விஷயங்களைக் கூறி உதவி கேட்க கொடுக்கப்படும் எண் ஆகும்.


ஆனால் சில நேரங்களில் சிலர் தவறான நோக்கத்தோடு அல்லது அவசர உதவி பட்டியலிலேயே இல்லாத காரணங்களுக்காக அழைத்து வெறுப்பேற்றுவதுண்டு.
கனடா நாட்டில் அது மாதிரியான ஒரு சம்பவம் தான் நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் கனடாவின் அவசர உதவி எண்ணான 911ஐ அழைத்த ஒரு பெண், தனக்கு அவசர உதவி தேவை என பதற்றமாக பேசியுள்ளார். இதனை அடுத்து அவசர உதவி கால் செண்டர் ஊழியர், என்ன உதவி தேவை என வினவியுள்ளார்.


அதற்கு பதில் அளித்த அப்பெண் தான் தற்போது டொராண்டோ ரயில் நிலையம் நோக்கி டாக்ஸி ஒன்றில் சென்று கொண்டிருப்பதாகவும், ஆனால் குறித்த நேரத்தில் அங்கு செல்ல முடியுமா என தெரியவில்லை.


எனவே நான் குறிப்பிட்ட ரயிலை தவறவிடாமல் இருக்க அவசர சவாரி சேவை ஏதேனும் உள்ளதா என கேட்டுள்ளார். தொலைபேசியில் பேசிய பெண்ணின் கேள்வியால் வெறுப்படைந்த அந்த ஊழியர் அப்படி ஒரு சேவையும் இல்லை என கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.


இது குறித்து தற்போது தகவல் தெரிவித்துள்ள அதிகாரிகள் நடப்பாண்டில் இது மாதிரியான தேவையற்ற அழைப்புகள் ஆயிரக்கணக்கில் வந்துள்ளதாக குறிப்பிட்டனர். குடிபோதையில் அழைப்பவர்கள், குழந்தைகள், தேவையில்லாமல் அவசர உதவியை அழைப்போரால், உண்மையிலேயே அவசர உதவிக்கு அழைப்போரின் அழைப்பை ஏற்பதில் தாமதம் ஏற்படுகிறது.


ஒருவரின் உடல்நலம், பாதுகாப்பு அல்லது சொத்து உடனடி ஆபத்தில் இருந்தால் அல்லது குற்றம் நடந்து கொண்டிருந்தால் மட்டுமே 911 ஐ டயல் செய்யுங்கள். அவசரம் அல்லாத சூழ்நிலைகளுக்கு 905-453-3311 ஐ டயல் செய்யுமாறு அழைப்பாளர்களை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments