பிரசவம் பார்த்த பெண்ணின் வயிற்றில் ஊசி வைத்து தைப்பு..

Breaking News

header ads

பிரசவம் பார்த்த பெண்ணின் வயிற்றில் ஊசி வைத்து தைப்பு..


பிரசவம் பார்த்த பின் ஊசியை பெண்ணின் வயிற்றில் வைத்து தைத்த கொடுமை


பிரசவம் பார்த்த பெண்ணின் வயிற்றில் ஊசி வைத்து தைப்பு..

ராமநாதபுரம் அருகே பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் தையல் போட பயன்படும் ஊசியை வைத்து தைத்த விவகாரத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



ராமநாதபுரம் மாவட்டம் மரவெட்டிவலசை பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி ரம்யா. இவர், கடந்த 19ம் தேதி தலைப் பிரசவத்திற்காக உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரை மருத்துவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.





அங்கு ரம்யாவின் வயிற்றில் தையல் போட பயன்படுத்தப்படும் ஊசி இருப்பது கண்டறியப்பட்டு அகற்றப்பட்டது.


இதையடுத்து, உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட அவரது உறவினர்கள், கவனக்குறைவாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து அங்கு வந்த ராமநாதபுரம் மாவட்ட தாய் சேய் நல அலுவலர் பத்மா உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

Post a Comment

0 Comments