தூத்துக்குடி அருகே இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் தானும் கழுத்தை அறுத்து தற்கொலை கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தெற்குவீரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் முருகன் என்பவர் மனைவி பகவதி (வயது 24). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் திருநெல்வேலி துலுக்கர் குளத்தைச் சேர்ந்த ஊர்க்காவலன் மகன் ரமேஷ்பாபு (38) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் முருகனுக்கு தெரிய வரவே அவர் பகவதியை கண்டித்தாராம்.
இதனால் பகவதி வேலைக்கு செல்லாமல் ரமேஷ்பாபுவிடம் பேசாமல் இருந்தாராம். இன்று முருகன் வேலைக்கு சென்றுவிட்டார்.காலை சுமார் 11 மணியளவில் பகவதி தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டுக்கு வந்த ரமேஷ்பாபு தன்னிடம் பேசாதது குறித்து பகவதியிடம் கேட்டதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றவே கோபமடைந்த ரமேஷ்பாபு பகவதியின் கழுத்தை கத்தியால் அறுத்து குத்தியும் உள்ளார்..
இதில் ரத்த வெள்ளத்தில் வீட்டை விட்ட வெளியே ஓடி வந்த பகவதியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் திரண்டு வரவே அச்சத்தில் ரமேஷ்பாபு தனக்கு தானே கத்தியால் தன் கழுத்தை அறுத்து கொண்டாராம். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் உடனே தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் ரமேஷ்பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் பகவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து சிப்காட் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன், எஸ்ஐ முத்துகணேஷ் ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் ரூரல் டிஎஸ்பி கலை கதிரவன், மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.



0 Comments