கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனம் செல்வதற்காக 45 வயதிற்கு உட்பட்ட 319 பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
ஆன்லைனில் மூலம் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாகவும், இதில் யாரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும் அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பதிவு செய்தவர்களில் ஆந்திராவைச் சேர்ந்தவர்களே அதிகம் என்றும் 2ம் இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பதாகவும் கேரள காவல்துறையினர் கூறியுள்ளனர்.
சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என கேரள அரசு கூறியிருந்த நிலையில், கோயிலுக்கு வரும் பெண்கள் தங்குமிடம் குறித்து உச்ச நீதிமன்றம் சரியான வழிகாட்டுதல் வழங்கவில்லை என கேரள நீதித்துறை அமைச்சர் ஏ.கே. பாலன் தெரிவித்துள்ளார்.



0 Comments