தனித்தனி தீவுகளாக மாறிய தூத்துக்குடி அரசு மருத்துவமனை ! பொதுமக்கள் அவதி ! தொற்று நோய் பரவும் அபாயம்..!

Breaking News

header ads

தனித்தனி தீவுகளாக மாறிய தூத்துக்குடி அரசு மருத்துவமனை ! பொதுமக்கள் அவதி ! தொற்று நோய் பரவும் அபாயம்..!



தூத்துக்குடி நகரில் நேற்றிரவு 33மீமி கனமழை பெய்தது.  தூத்துக்குடி நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் பெய்த மழைநீர் இதுவரை பல்வேறு இடங்களில்  அப்புறப்படுத்தாத சூழ்நிலையில்.தற்போது பெய்த மழையில் தூத்துக்குடி நகரத்தில் பல்வேறு இடங்கள் நீர் சூழ்ந்து தீவு போல் காட்சி அளிக்கிறது.



தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை நீதிமன்ற குடியிருப்பு அருகில் உள்ள பிரதான சாலையில்  ஒரு அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது.இந்த சாலையானது பள்ளி,கல்லூரி,வேலைக்கு செல்பவர்களுக்கு இது பிரதான சாலையாகும் .இந்நிலையில் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம் மேடு தெரியாமல் கீழே விழுந்து செல்லும் நிலமைக்கு ஆளாகினார்கள்.

அதே போல் மாநகரை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தண்ணீரில் சூழ்ந்து தீவு போல் உள்ளது.அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரசவ வார்டு,பிணவரை,காய்ச்சல் தடுப்பு பிரிவு வார்டு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து உள்ளது.
இதில் சாக்கடை நீரும் கலந்து உள்ளது.
இதனால் பிரசவ வார்டு,பிணவரை, மாணவியர் விடுதி உள்ளிட்ட பகுதிகள் தனித்தீவுகள் போல் காட்சி அளிக்கின்றன.

நோய் போக்க 
மருத்துவமனைக்கு சிகைச்சைக்கு வரும்
 பொதுமக்களுக்கு நோய் உருவாக்கும் வகையில் இருப்பதால் நோயாளிகள்  தரப்பில் வருத்தம் தெரிவிக்கின்றனர்.


எனவே மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்,நோயாளிகள்,மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments