சென்னையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக இந்திய தொழில்நுட்பக் கல்லூரியில் முதுநிலை முதலாமாண்டு படிக்கக்கூடிய மாணவி பாத்திமா லத்தீப் என்பவர் அங்கு பணிபுரியக்கூடிய பேராசிரியர் சுதர்சன் பத்மநாதன் அவர்களால் மத ரீதியாக மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டார் இதை கண்டித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டும் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் விவிடி சிக்னல் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.
இதற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீநாத் தலைமை வகித்தார் மாவட்ட துணைத்தலைவர் கார்த்தி முன்னிலை வகித்தார் மாவட்ட துணை செயலாளர் மாறி ஒன்றிய செயலாளர் விஜய் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர் மாவட்ட செயலாளர் ஜாய்சன் நிறைவுரை ஆற்றினார் முத்துராஜ் மனோஜ் இசக்கி சோலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


0 Comments