தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரதான வாயில் பகுதி யில் மின்விளக்கு அமைக்க இந்திய வாலிபர் சங்கம் கோரிக்கை
இது தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகர குழு வெளியிட்டுள்ள அறிக்கை
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினசரி பல்லாயிரக்கணக்கான நோயாளிகளும் அவர்களைப் பார்ப்பதற்காக பொதுமக்களும் தினசரி வந்து செல்லக்கூடிய மருத்துவமனையாக மருத்துவமனை உள்ளது இந்த மருத்துவமனையின் பிரதான பாதை மின்விளக்கு இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர் குறிப்பாக இரவு நேரங்களில் பெண்கள்மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப் படக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது இந்த பகுதியில்தான் இருசக்கர வாகனம் என்பது நிறுத்துமிடம் என்பது உள்ளது இந்த பகுதியில் இரவு நேரம் இரு சக்கர வாகனத்தை எடுக்க வரும்போது சமூகப் செயல்கள் நடைபெறுகின்றன எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த பிரதான வாயிலில் மின் விளக்கு என்பது அமைக்க வேண்டும் என இந்திய வாலிபர் சங்கத்தின் தூத்துக்குடி மாநகரகுழு சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.


0 Comments