ஜன.8ம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தம் : தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆலோசனை

Breaking News

header ads

ஜன.8ம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தம் : தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆலோசனை


ஜன.8ம் தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்தம் தொடர்பாக தூத்துக்குடியில் தொழிற்சங்கங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் மத்திய தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம், தூத்துக்குடி ஐஎன்டியூசி அலுவலகத்தில் செயல் தலைவர் பி.கதிர்வேல் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் சிஐடியூ சார்பில் துறைமுக சபை உறுப்பினர் ரசல், பேச்சிமுத்து, ஐஎன்டியூசி சார்பில் ராஜகோபாலன், பாலசிங்கம், தொமுசா சார்பில் சுசீரவீந்திரன், கருப்பசாமி, ஏஐசிசிடியூ சார்பில் சிவரமன், எச்எம்எஸ் சார்பில் சத்யா, உட்பட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் ஏஐடியூசி முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் குருதாஸ் குப்தா மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த செப்.30ம் தேதி டெல்லியில் நடந்த அகில இந்திய கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய தொழிற்சங்கங்கள் 2020 ஜனவரி 8ம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. மத்திய அரசு கடைபிடிக்கும் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்தும், தொழிலாளர் உரிமைகளை பறித்து கொத்தடிமைகளாக மாற்றும் சட்ட திருத்தங்களை கைவிடக் கோரியும் பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்பனை செய்வதை தடுத்திட வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. 

இதற்கான ஆயத்த மாநாடு நவ.13ல் மதுரையில் நடக்கிறது. இதில் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்பது என்றும், மாவட்டம் முழுவதும் வேலைநிறுத்த ஆயத்த கூட்டங்கள் நடத்துவது, மத்திய அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது, ஜன.8ம் தேதி வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வது, இதில் அனைத்து துறைமுகங்கள், அனல்மின் நிலையங்கள், போக்குவரத்து கழகம், கூட்டுறவு, பொது விநியோகம், தனியார் வாகனங்கள், ஆட்டோக்கள், தனியார் நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், முறைசாரா தொழிலாளர்களை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

0 Comments