தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்த வந்த நிலையில் தற்போது இந்த வருடம் மேலும் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகவும் , திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டமாகவும்
காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாகவும், வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பட்டூர் மற்றும் ராணிபேட் மாவட்டமாகவும் பிரிந்தன.
இதனால் தற்போது தமிழகத்தில் 37 மாவட்டங்களாக அதிகரித்து உள்ளது.இந்நிலையில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களை தமிழக அரசு நியமனம் செய்து அறிவித்து உள்ளது.
அதன் படி
கள்ளக்குறிச்சி
மாவட்ட ஆட்சியராக கிரண் குராலா ,
எஸ்.பி.யாக டி.ஜெயச்சந்திரன் ,
தென்காசி
மாவட்ட ஆட்சியராக அருண்சுந்தர் தயாளன்,
எஸ்.பி.யாக சுகுணா சிங் ,
ராணிப்பேட்
மாவட்ட ஆட்சியராக திவ்யதர்ஷினி ,
எஸ்.பி.யாக மயில்வாகனன் ,
திருப்பத்தூர்
மாவட்ட ஆட்சியராக சிவன் அருண்,
எஸ்.பி.யாக விஜயகுமார் ,
செங்கல்பட்டு
மாவட்ட ஆட்சியராக ஜான் லூயிஸ் ,
எஸ்.பி.யாக கண்ணன்
ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.



0 Comments