இஸ்ரேலின் புதிய பிரதமரை தேர்வு செய்ய வேண்டும் என அந்நாட்டு அதிபர் அறிவிப்பு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது 3 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் சட்ட ரீதியாக வேறு வழியே இல்லாமல் அவர் தமது பதவியை ராஜினாமா செய்யும் சூழல் உருவாகியுள்ளது.
அவர் மீதான 3 வழக்குகளிலும் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பத்து வருடகாலம் சிறைத் தண்டனை கிடைக்கலாம். தொடர்ச்சியாக இரண்டு தேர்தல்கள் இந்த ஆண்டில் நடைபெற்ற நிலையில் கடும் குழப்பமான அரசியல் சூழலில் நேதன்யாகு கைது செய்யப்பட்டால் அடுத்து நாட்டை யார் ஆள்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.
நேதான்யூ சுமார் 2 லட்சத்து அறுபத்து நான்கு ஆயிரம் டாலர் மதிப்புள்ள வெகுமதிகளைப் பெற்றுக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது . ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.



0 Comments