டெல்லி ஜெ.என்.யு பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் பிரச்சனையைக் களைய 3 பேர் குழு அமைப்பு..!

Breaking News

header ads

டெல்லி ஜெ.என்.யு பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் பிரச்சனையைக் களைய 3 பேர் குழு அமைப்பு..!



டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு இடையே நடந்து வரும் பிரச்சனையைக் களைய 3 பேர் கொண்ட குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னறிவிப்பு இன்றி விடுதி கட்டணம் உயர்த்தப்பட்டதை திரும்பப் பெற வலியுறுத்தி, ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முயன்றனர். மூன்றடுக்கு பாதுகாப்பை தாண்டிச் செல்ல முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் மாணவர்கள் காயமடைந்தனர். போலீசார் விரட்டியதை அடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் பலர் தடியடிக்கு அஞ்சி ஓடியதால் பதற்றமான சூழல் நிலவியது.

மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகளை சந்தித்து மாணவர்கள் கோரிக்கைகளை முன்வைத்ததைத் தொடர்ந்து, நிர்வாகத்திற்கும்- மாணவர்களுக்கு இடையிலான பிரச்சனையை சரிசெய்ய யு.ஜி.சி. தலைவர் வி.எஸ்.சவுகான் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை நியமித்து கல்வித்துறை செயலாளர் சுப்ரமணியன் உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments