28 வயது பிரபல பாடகியின் விபரீத முடிவால் ஏற்பட்ட சோகம்..!

Breaking News

header ads

28 வயது பிரபல பாடகியின் விபரீத முடிவால் ஏற்பட்ட சோகம்..!



தென்கொரியாவின் பிரபல பாப் பாடகியான கூ ஹாரா ( goo hara ) தமது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.

பெண்கள் மட்டுமே கொண்ட கே பாப் என்ற காரா பாப் பேண்டு இசைக் குழுவைச் சேர்ந்தவர் goo hara.28 வயதான இந்த பாடகி, தற்கொலை செய்துக் கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான கரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கூ ஹாரா கடந்த 2008-ம் ஆண்டில் காரா என்ற பெண் இசைக்குழுவின் உறுப்பினராக அறிமுகமாகி தனது திறமையால் பிரபலமான பின்னர், தென் கொரியா மற்றும் ஜப்பானில் தனி கலைஞராக தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார்

6 மாதங்களுக்கு முன்பும் இவர் தற்கொலைக்கு முயன்று சுயநினைவு அற்ற நிலையில் மீட்கப்பட்டார். தமது காதலன் தம்மை ஆபாசமாக படமெடுத்ததாக வழக்குத் தொடர்ந்த அவர், மன உளைச்சல் காரணமாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்லாமல் இருந்து வந்தார். இவர் தொடர்ந்த வழக்கில் காதலனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று அவர் கடைசியாக இன்ஸ்டாகிராமில் குட் நைட் என பதிவிட்டுள்ளார். தென்கொரிய அரசு புள்ளிவிவரங்களின்படி, 10 முதல் 39 வயதிற்குட்பட்ட தென் கொரியர்கள் மரணித்தால் பெரும்பாலும் அது தற்கொலையாக தான் உள்ளது.



மேலும் உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, உலகிலேயே அதிக தற்கொலை நடக்கும் நாடுகளில் தென் கொரியாவும் ஒன்றாகும் என கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments