தென்காசி கோட்டத்தில் மின்குறைகள் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு

Breaking News

header ads

தென்காசி கோட்டத்தில் மின்குறைகள் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு



நெல்லை மாவட்டம் தென்காசி கோட்டத்தில் மின் வினியோகம் தொடர்பான குறைகளை தெரிவிக்க அதிகாரிகளின் செல்போன் எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
               இதுகுறித்து தென்காசி மின்வாரிய செயற்பொறியாளர் கற்பகவிநாயக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-தென்காசி மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட தென்காசி, குற்றாலம், செங்கோட்டை,  ஆய்க்குடி, வடகரை, புளியரை, சுரண்டை, பாவூர்சத்திரம், கீழப்பாவூர், ஆவுடையானூர், வீ.கே.புதூர், சுந்தரபாண்டியபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் மின்விநியோகம், குறைவான மின்அழுத்தம் உள்ளிட்ட புகார்களை தங்கள் பகுதியில் உள்ள பிரிவு அலுவலரை தொடர்பு கொள்ளும் வகையில் அதிகாரிகளின் செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  தென்காசி நகர்புறம் உதவி செயற்பொறியாளர் 9445854413, உதவி பொறியாளர் விநியோகம் 9445854416, தென்காசி நகர்புறம்-1 உதவி பொறியாளர் 9445854414, நகர்புறம்-2 உதவி பொறியாளர் 9445854415, குற்றாலம் உதவி பொறியாளர் 9445859409, செங்கோட்டை உதவி செயற்பொறியாளர் 9445854417, கிராமப்புற உதவி பொறியாளர் 9445859390, நகர்புறம் உதவி பொறியாளர் 9445854418, ஆய்க்குடி உதவி பொறியாளர் 9445859381, வடகரை உதவி பொறியாளர் 9445854417, தென்காசி கிராமப்புறம் உதவி பொறியாளர் 9445854419, சுரண்டை உதவி செயற்பொறியாளர் 9445854420, பாவூர்சத்திரம் உதவி பொறியாளர் 9445854425, கீழப்பாவூர் உதவி பொறியாளர் 9445859373, ஆவுடையானூர் உதவி பொறியாளர் 9445854422, வீகே.புதூர் உதவி பொறியாளர் 9445854424, சுந்தரபாண்டியபுரம் உதவி பொறியாளர் 9445859368, சுரண்டை உதவி பொறியாளர் 9445859400, சுரண்டை கிராமப்புறம் உதவி பொறியாளர் 9445854844. இந்த எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
                     இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Post a Comment

0 Comments