தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெள்ளப்பட்டி கிராமத்தில் உள்ள கடற்கரையில் நேற்று மாலை அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கியது. இதனை கன்ட் பொதுமக்கள் காவல்துறை க்கு தகவல் தெரிவித்தனர்.பின்னர் தூத்துக்குடி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.
இறந்து போன நபர் தூத்துகுடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெள்ளை பட்டியை சேர்ந்த அந்தோணி சின்னதுரை (வயது 43) எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில்
இறந்தவரின் மனைவி மகன்கள் கடலில் தவறி விழுந்து இறந்ததாக கூறி வரும் நிலையில் இறந்தவரின் சகோதர சகோதரிகள் அவரை கொலை செய்தது அவரது மனைவி மகன்கள் என குற்றம் சுமத்துகின்றனர் .அதனால் இறந்தவரின் பிரேதத்தை அவரது மனை வி மகன்களிடம் கொடுக்க கூடாது நியாயமன விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்தோணி சின்னதுரை கொலை செய்யப்பட்டாரா? கடலில் தவறி விழுந்தாரா என காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.



0 Comments