குமுளியில் பேருந்து சக்கரத்தில் சிக்கி கூலி தொழிலாளி பலி.

Breaking News

header ads

குமுளியில் பேருந்து சக்கரத்தில் சிக்கி கூலி தொழிலாளி பலி.



குமுளி பேருந்து நிலையத்தில்  பின்னோக்கி வந்த அரசு பேருந்து  சக்கரத்தில் சிக்கி கூலி தொழிலாளி பரிதாபமாக உயிர் இழந்தார்.
தமிழக எல்லைப் பகுதியான குமுளி, கூடலூர் நகராட்சியின் 21-வது வார்டு பகுதியாக உள்ளது. குமுளி பகுதியில் பஸ்டாண்டு இல்லாததால் அனைத்து பஸ்களும் சாலையோரங்களில் நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று  வழக்கம் போல் கம்பத்தில் இருந்து குமுளிக்கு சென்ற அரசு பேருந்து  பயணிகளை இறக்கிவிட்டு டிரைவர் பஸ்சை திருப்ப பின்னோக்கி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராமல் ஒருவர் பேருந்து  பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
இது குறித்து லோயேர்கேம்ப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கூடலூர் காவல் ஆய்வாளர்  சுரேஷ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் இறந்தவர் கேரள மாநிலம் குமுளி அம்பாடி காலனியைச் சேர்ந்த அய்யப்பன்(55) கூலி தொழிலாளி எனத் தெரியவந்தது.இது தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுனர்  பாலகுருநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (41) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Post a Comment

0 Comments