பெண் குழந்தை தினமான ஜனவரி-24இல் மாநில அரசின் விருதுக்கான காசோலை மற்றும் பாராட்டு பத்திரம் பெறுவதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு : 2019ம் ஆண்டிற்கான பெண்கல்வி, பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணம் தடுத்தல், சமூக அவலங்கள் மற்றும் அதனை தீர்வு காண்பதற்கான புத்தகங்கள் மற்றும் கையேடு எழுதி வெளியிட்டவர்கள்,
ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்ற வீரதீரசெயல் புரிந்த 5 முதல் 18 வயதிற்குட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகளுக்கு பெண் குழந்தை தினமான ஜனவரி-24இல் மாநில அரசின் விருதுக்கான காசோலை மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கிடும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுடையவர்கள் இது தொடர்பான விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட மாவட்ட சமூகநல அலுவலக முகவரியில் பெற்று 31.07.2019 அன்று மாலை ஐந்து மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கோரம்பள்ளம்,
தூத்துக்குடி - 628101 போன் -0461-2325606
என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரிதெரிவித்துள்ளார்.


0 Comments