பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்..!

Breaking News

header ads

பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்..!



திருச்சிராப்பள்ளி,ஜூலை,10,

திருச்சி அரசு மருத்துவமனையில் பாரத் மேன்பவர் ஏஜென்சியில் பணிபுரியும் ஒப்பந்த
தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலி ரூ 380 வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்
தீர்மானித்த கூலியை கொடுக்காத அரசு மருத்துவமனை முதல்வர் மீது சட்டப்படியான நடவடிக்கை
எடுக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர் சதீ~;சை வேலை விட்டு நீக்கி பழிவாங்கும்
நடவடிக்கையை கைவிட்டு சதீ~;க்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவனை ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
(சிஐடியு) சார்பில் புதனன்று மருத்துவமனை வளாகத்தில் குடும்பத்துடன் காத்திருப்பு
போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாறன் தலைமை
வகித்தார். போராட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன்,
மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவனை ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர்
கார்த்திக், மாவட்ட தலைவர் மோகன், ஆட்டோ ரிக்~h ஓட்டுனர் சங்க பொதுச்செயலாளர்
மணிகண்டன், மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க மாவட்ட செயலாளர்
ராமச்சந்திரன், கிளைசெயலாளர் செல்வராஜ் ஆகியோர் பேசினர்.

போராட்டத்தில் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவனை ஒப்பந்த தொழிலாளர்
சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments