தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 24 மணி நேரமும் லோடு ஆட்டோ செல்ல அனுமதிக்க கோரி : சிஐடியு ஆர்ப்பாட்டம்

Breaking News

header ads

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 24 மணி நேரமும் லோடு ஆட்டோ செல்ல அனுமதிக்க கோரி : சிஐடியு ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் அனைத்து நேரங்களிலும் லோடு ஆட்டோ செல்ல அனுமதிக்க வலியுறுத்தி
தூத்துக்குடி மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி ஜூலை 9:-

சாலைப் போக்குவரத்து சட்டம் 2017ஐ அமல்படுத்தக் கூடாது, இன்சூரன்ஸ் கட்டணங்களை இஷ்டம்போல் ஏற்றக்கூடாது, பெட்ரோல், டீசல், கேஸ், ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும், டோல்கேட் கட்டணங்களை குறைக்க வேண்டும், மோட்டார் வாகன ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள், மோட்டார் வாகன தொழிலாளர்களை காப்பாற்றவேண்டும், ஸ்பேர் பார்ட்ஸ் கடைகளை மூடி கார்ப்பரேட் வசம் ஒப்படைக்க கூடாது , விவி கிரி லேபர் இன்ஸ்டிடியூட் பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும், தூத்துக்குடி மாநகரில் லோடு ஆட்டோக்கள் காலை 11 மணி முதல் 4 மணி வரை மட்டுமே செல்ல அனுமதிக்கும் நடைமுறையை மாற்றி அனைத்து நேரங்களிலும் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தத்தில் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு சாலைப் போக்குவரத்து  தொழிற்சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் சிவதாணு தாஸ் தலைமை வகித் தார். சாலை போக்குவரத்து தொழிற்சங்க மாவட்ட பொறுப்பாளர் முருகன், சாலைப் போக்குவரத்து தொழிற்சங்க தூத்துகுடி மாவட்ட செயலாளர் வயனப்பெருமாள், சிஐடியு தொழிற்சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ரசல்  உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர். சிஐடியு தொழிற்சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் பேச்சிமுத்து நிறைவுரை ஆற்றினார்.

Post a Comment

0 Comments