பிளஸ்-2 மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த ஆசிரியரை பணி இடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
திண்டுக்கல் அருகே உள்ள தருமத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஒருவருக்கு அதே பள்ளியில் பணிபுரியும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ராஜா அசோக் குமார் காதல் கடிதம் எழுதினார். பின்னர் அந்த கடிதத்தை மாணவிக்கு கொடுத்த தகவல் பள்ளி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது.
மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய விபரம் மற்ற மாணவிகள் இடையே சங்கடத்தை ஏற்படுத்தியதால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து பட்டதாரி ஆசிரியர் ராஜா அசோக்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமார் உத்தரவிட்டார்.



0 Comments