பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுரூபவ் சாதனை
புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது
வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி
தெரிவித்துள்ளது:
பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுரூபவ் சாதனை புரிந்த 5
வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய
பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24 ல் மாநில அரசின் விருதுக்கான காசோலை
ஒரு லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் பெறுவதற்கு 5 வயதிற்கு மேல் 18
வயதிற்குட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகள்ரூபவ் பிற பெண் குழந்தைகளின்
கல்விக்கு உதவுதல்ரூபவ் பெண் குழந்தை தொழிலாளர் ஓழிப்புரூபவ் பெண் குழந்தை திருமணத்தை
தடுத்தல் மற்றும் தவிர்;த்தல்ரூபவ் வேறு ஏதாவது வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை
செய்திருத்தல்ரூபவ் பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள்ரூபவ் மூடநம்பிக்கைகள்
ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள்ரூபவ் கவிதைகள் மற்றும் கட்டுரைகள்
மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தி இருத்தல் வேண்டும்.
மேலும் ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை
பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் ஆகியவற்றில் வீர தீர
செயல் புரிந்த தகுதியுடைய நபர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்திலுள்ள
மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 15.07.2019 க்குள் விண்ணப்பிக்குமாறு
கேட்டுக்கொள்ளபடுகிறது.



0 Comments