நெல்லை பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே செயல்படும் தனியார் உணவகத்தில் பார்சலாக தயிர் ஒன்றை மகராஜன் என்பவர் வாங்கியுள்ளார்.
அப்போது தயிர் 40 ரூபா என்றாலும் பார்சல் செய்ய இரண்டு ரூபாயும், அந்த தயிருக்கு ஜிஎஸ்டி வரியாக இரண்டு ரூபாயும் என 44 ரூபாயை ஹோட்டல் நிர்வாகம் பில்லை கொடுத்து வசூலித்துள்ளது, தயிர், பால், காய்கறி போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி வரி இல்லை என்ற நிலையில் தயிருக்கு இரண்டு ரூபாய், அதை பார்சல் செய்ய இரண்டு ரூபாயும் வசூலித்ததை கண்டு மனம் நொந்த வாடிக்கையாளர் மகராஜன் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரம்மா மூலம் வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணை முடிவில் நுகர்வோர் மன உளைச்சலுக்கு 10,000 ரூபாயும், வழக்கு செலவுக்கு 5000 ரூபாயும், தயிருக்காக வசூல் செய்யப்பட்ட 44 ரூபாயையும் சேர்த்து 15,044 ரூபாயை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் தவறும் பட்சத்தில் 6 சதவிகித வட்டியுடன் வழங்க வேண்டும் என நெல்லை நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.



0 Comments