கனடாவைச் சேர்ந்த இண்டிகோ விமானியிடம் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயைக் திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லீ மெரிடியன் ஓட்டல் செல்வதற்காக வாடகைக் காருக்குக் காத்திருந்தபோது அதன் ஓட்டுநர் பேசிய இந்தி பாஷை, 60 வயதான கனடா விமானி முகமது மெஹ்து கன்ஸன்ஃபானி-க்கு ((Mohammad Mehdu Ghanzanfani)) புரியவில்லை. அருகில் இருந்த மற்றொரு டேக்ஸி ஓட்டுநரிடம் போனை கொடுத்து தகவல் பரிமாறக் கோரியபோது தானே 100 ரூபாய்க்கு உரிய இடத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி ஏற்றியதாகவும், நம்பி ஏறிய பின் ஏற்கெனவே காரில் இருந்த மூவருடன் சேர்த்து மிரட்டி தன் ஏடிஎம் கார்டு, அதன் பாஸ்வேர்ட், இந்திய மதிப்பில் 12 ஆயிரம் ரூபாய் பணம், 20 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் உள்ளிட்டவற்றை பறித்து பாதி வழியில் மேம்பாலம் மீது நள்ளிரவு இரண்டே கால் மணிக்கு இறக்கிவிட்டுச் சென்றதாக புகாரளித்தனர்.
விமானியின் வங்கிக் கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் பணமும் திருடப்பட்டது. இதுகுறித்து கனடாவைச் சேர்ந்த விமானி அளித்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



0 Comments