
விளாத்திகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமலும், சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளை கோவில்பட்டி அரசுமருத்துவமணைக்கு செல்லுமாறும் அலைகழிப்பதாக கூறி, விளாத்திகுளத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் காலை 7 மணி முதல் 10 மணி வரை வெளிப்புற நோயாளிகளை பார்ப்பதற்கு மட்டுமே, மருத்துவமனையில் மருத்துவர் இருக்கிறார்.மேலும் இரவு நேரத்தில் ஒரு மருத்துவர் கூட அங்கு இருப்பது கிடையாது, இரவு நேரங்களில் வயிற்று போக்கு, காய்ச்சல், வாந்தி பேதி என்று தீடீரென நோய்வாய் ஏற்பட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமணைக்கு சென்றால் அங்கே மருத்துவர் இருப்பது இல்லை, பெயரளவிற்கு செவிலியர் மட்டுமே அங்கு உள்ளனர்.அவர்களோ நீங்கள், உங்களுக்கு நோய் பிரச்சனை தீவிரமாக இருக்கிறது என்றால் நீங்கள் கோவில்பட்டி செல்லுங்கள் என்று நோயாளிகளிடம் கூறி அவர்களை அலைக்கழிப்பு செய்கின்றனர்.
மேலும் ஓர் ஆரம்ப சுகாதார மையத்திலே மகப்பேறுக்காக 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலையில், ஒரு தாலுகாவின் தலைமை அரசு மருத்துவமணையில் ஒரு தலைமை மருத்துவர், ஒரு உதவி மருத்துவர்கள் என குறைந்தபட்சம் இரண்டு மருத்துவர்கள் சுழற்ச்சி முறையில் 24 மணிநேரமும் இருந்திட வேண்டும் என்ற அரசுவிதிமுறை இருக்கும் பட்சத்தில், விளாத்திகுளம் அரசு மருத்துவமணையில் இரவு நேரம் மருத்துவர்கள் பணியில் இல்லாமல் இருப்பது ஏன்? என விளாத்திகுளம் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும், இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லாதிருக்கும் போது, பிரசவ வலியால் மகப்பேறுக்காக பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பட்சத்தில் தாய்க்கும், சேய்க்குமான பாதுகாப்பு உத்தரவு என்ன இருக்கிறது?
எனவே, விளாத்திகுளம் அரசு மருத்துவமணையில் பகல் நேரங்களில் போதிய அளவிலும், இரவு நேரங்களில் முழுவதும் மருத்துவர்கள் இல்லாதது இருக்கும் சூழல் நோயாளிகளின் உயிருக்கு உத்திரவாதமற்ற நிலைக்கு தள்ளப்படுகிறது.ஆகவே சுழற்சி முறையில் 24 மணிநேரமும் போதிய மருத்துவர்கள் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் இருந்திட வேண்டும் என வலயுறுத்தி, விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் சார்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அப்பகுதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


0 Comments