உலக கோப்பை 2019 : இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்றது தென் ஆப்பிரிக்கா..!

Breaking News

header ads

உலக கோப்பை 2019 : இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்றது தென் ஆப்பிரிக்கா..!




12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தொடங்கி ஒரு வாரம் ஆகிய நிலையில் .
 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடி விட்டு தொடர்ந்து ஓய்வில் இருந்த இந்திய அணி இன்று தனது முதலாவது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை சவுதம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் சந்திக்கிறது. இது முதல் ஆட்டம் என்பதால் வெற்றியுடன் தொடங்குவது மிகவும் முக்கியமானதாக உள்ளது .


உலக கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பந்துவீச்சு

இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி முதலில் பந்துவீசுகிறது.

தென்ஆப்பிரிக்க அணி தனது முதல் ஆட்டத்தில் 104 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடமும், 2-வது ஆட்டத்தில் 21 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடமும் தோல்வி அடைந்தது. உலக கோப்பை வரலாற்றில் தென்ஆப்பிரிக்க அணி தனது முதல் 2 ஆட்டங்களில் வரிசையாக தோற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் தென்ஆப்பிரிக்க அணியினர் சரிவில் இருந்து மீண்டெழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்தியா அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

 செய்திகளை உள்ளது உள்ளபடி உடனுக்குடன் அறிய இணைந்திருங்கள் செய்தித்தளம் .(www.seithithalam.com )


Post a Comment

0 Comments