
குஜராத் மாநிலம் ஒக்கா வில் இருந்து தூத்துக்குடி க்கு வந்து செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்படும் நிலை இருப்பதாக தெற்கு ரயில்வே கோட்ட தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன .
விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் குஜராத் மாநிலம் ஒக்கா துறைமுக நகரத்தில் இருந்து தூத்துக்குடி துறைமுக நகருக்கு வாரம் ஒருமுறை இயக்கப்படுகிறது, இந்த ரயிலானது 2710 கீலோ மீட்டர் பயணிக்கிறது.இது குஜராத் மாநிலத்தில் இருந்து தொடங்கி மகராஷ்ட்ரா மத்தியபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு என ஆறு மாநிலங்கள் வழியாக நீண்டதூர பயணத்தை மேற்கொள்கிறது.

விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலானது ஒக்காவில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமை இரவு 11.55 மணிக்கு புறப்படும்.இந்த ரயிலானது மொத்தம் 20 பெட்டிகளோடு சுமார் 1500 பயணிகளுடன் 5 மாநிலங்களை கடந்து தூத்துக்குடி ரயில் நிலையத்தை ஞாயிற்றுகிழமை காலை 7.10 மணிக்கு வந்தடைகிறது.
பின்னர் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு தூத்துக்குடி ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு , வியாழன் அதிகாலை 1.35 மணிக்கு குஜராத் மாநிலத்தில் உள்ள ஒக்காவிற்கு சென்றடைகிறது.
தூத்துக்குடியில் இருந்து அதிகதூரம் இயங்கக்கூடிய ஒரே ரயில் விவேக் எஸ்பிரஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை ரயில் நிலையத்தோடு நிறுத்தப்பட
உள்ளதாகவும், தூத்துக்குடி வரை இயக்கப்படாது எனவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது.,
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு கிளம்பும் ரயிலின் துரிதபராமரிப்பு பணிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மட்டுமே இடம் உள்ளது, ஆகையால் விவேக் எக்பிரஸ் ரயிலுக்கு துரித பராமரிப்பு பணி செய்ய போதிய இடவசதி இல்லை.ஆகவே விவேக் எக்பிரஸ் ரயிலை மதுரை ரயில்வே நிலையத்தோடு நிறுத்தி அங்கிருந்து மீண்டும் ஓக்காவிற்கு செல்ல உள்ளதாக தெரிவித்தார்.
மாநிலம் விட்டு பிற மாநிலங்களுக்கு செல்லும் போது ரயிலில் மட்டுமே கட்டணம் குறைவாகவும், போதிய பயண வசதியும் உள்ளது.இந்நிலையில் கர்நாடகா, ஆந்திரா, மத்தியபிரதேசம், மகராஷ்ட்ரா போன்ற மாநிலங்களுக்கு, தூத்துக்குடி யில் இருந்து செல்ல விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் சிறப்பாக இயங்கி வந்தது.
அதேபோல் தூத்துக்குடி பகுதியானது தொழில்,வர்த்தக ரீதியான நகரமாகும்,இங்கு பல்வேறு மாநிலத்தை சார்ந்த பல தரப்பினர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ரயில் சேவையானது தொழில் நகரமான குஜராத் மற்றும் தூத்துக்குடியை இணைக்கும் பாலமாக அமைந்துள்ளது.


0 Comments