தயாரிப்பாளர் சங்க தேர்தல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..!

Breaking News

header ads

தயாரிப்பாளர் சங்க தேர்தல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..!

Image result for madras court

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடத்துவது குறித்து தமிழக அரசும், விஷாலும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சங்கத்துக்கு தனி அதிகாரியை நியமித்ததற்கு எதிரான விஷால் வழக்கில், தனி நிர்வாகி நியமனத்துக்கு தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இன்றைய விசாரணையின்போது, தயாரிப்பாளர் சங்க பதவி காலம் முடிவடைந்ததால் தேர்தலை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடத்த உத்தரவிடக் கோரும் வழக்கு நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.Image result for vishal

இரு வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதி, தேர்தல் தொடர்பாக தமிழக பத்திரப்பதிவுத் துறை தலைவர், செயலாளர், தனி அதிகாரி, விஷால் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 16-க்கு ஒத்திவைத்தார்.

Post a Comment

0 Comments