ஜூன் மாதம் வெளியாக உள்ள பிரபல தமிழ் படங்கள் பட்டியல்..!

Breaking News

header ads

ஜூன் மாதம் வெளியாக உள்ள பிரபல தமிழ் படங்கள் பட்டியல்..!

Image result for சிந்துபாத் விஜய் சேதுபதிதமிழ் நாட்டில் கோடை வெயில் தணிந்துள்ளது. பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் புதிய படங்களை திரைக்கு கொண்டு வர பட அதிபர்கள் தயாராகி உள்ளார்கள். இந்த மாதம் 10 படங்கள் திரைக்கு வருகின்றன. வருகிற 7-ந் தேதி ‘கொலைகாரன்’ படம் வெளியாகிறது.

இதில் விஜய் ஆண்டனி, ஆஷிமா நர்வால் ஜோடியாக நடித்துள்ளனர். அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார். திகில் படமாக தயாராகி உள்ளது. வருகிற 14-ந்தேதி கொலையுதிர் காலம், கேம் ஓவர், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஆகிய 3 படங்கள் வெளியாகின்றன.



கொலையுதிர் காலம் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரதாப் போத்தன், பூமிகா ஆகியோரும் உள்ளனர். ஐராவுக்கு பிறகு நயன்தாரா நடிப்பில் இன்னொரு திகில் படமாக வருகிறது. இந்த படத்துக்கு தணிக்கை குழு யூஏ சான்றிதழ் அளித்துள்ளது.

வருகிற 21-ந்தேதி விஜய் சேதுபதி நடித்துள்ள சிந்துபாத், தனுசின் பக்கிரி, ஜீவாவின் கொரில்லா மற்றும் தும்பா ஆகிய 4 படங்கள் திரைக்கு வருகின்றன. 28-ந்தேதி ஜெயம்ரவி நடித்துள்ள கோமாளி, யோகிபாபுவின் நகைச்சுவை படமான தர்மபிரபு ஆகிய படங்கள் வெளியாகின்றன.

Post a Comment

0 Comments