நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே பழைய பேப்பர் குடோனில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.தச்சநல்லூரை அடுத்த ராமையன்பட்டியில் விஜயராஜ் என்பவருக்கு சொந்தமான பழைய பேப்பர் குடோன் உள்ளது. பல இடங்களிலும் சேகரிக்கப்படும் பழைய காகிதங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் இங்கு கொண்டுவரப்பட்டு, எந்திரங்கள் மூலம் பண்டல்களாக கட்டப்பட்டு பல்வேறு ஆலைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த கிடங்கில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் சேமிப்பு கிடங்கு முற்றிலும் தீக்கிரையானதில் சுமார் 80 லட்ச ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள், பொருட்கள் சேதமடைந்துள்ளன. மேலும் தீ விபத்து குறித்து தச்சநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



0 Comments