வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்

Breaking News

header ads

வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்

Related imageதஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில், வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்க வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் நூதனமுறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூர் ஆண்டி நத்தம் காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லியோ பாஸ்டின் (டூவீலர் மெக்கானிக்),  இவருக்கும் இவரது வீட்டின் அருகே உள்ள சொந்த மாமாவான அந்தோணி தாஸ் என்பவருக்கும் பல ஆண்டு காலமாக இடப்பிரச்சினை உள்ளது.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை காலை 9 மணி அளவில் ஒரத்தநாடு நகர்ப் பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி, 'எனது வீட்டிற்கு சுமார் நாற்பது ஆண்டு காலமாக மின்சாரம் இல்லை, உடனடியாக மின்சார அதிகாரிகள் எனது வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் செல்போன் கோபுரத்தில் இருந்து குதித்து விடுவேன்' என  தற்கொலை
லியோ பாஸ்டின்
மிரட்டல் விடுத்தார்.

இது தொடர்பாக இப்பகுதி மக்கள் ஒரத்தநாடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒரத்தநாடு டி.எஸ்.பி காமராஜ், காவல்துறை ஆய்வாளர் முத்துலட்சுமி, தீயணைப்பு ஆய்வாளர் பொன்னுச்சாமி, ஒரத்தநாடு வட்டாட்சியர் அருள்ராஜ், மற்றும் மின் வாரிய அதிகாரிகள் சுமார் 3 மணி நேரமாக லியோ பாஸ்டினிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஒரு வழியாக சமாதானத்திற்கு வந்த லியோ பாஸ்டின் செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கினார்.

அவரை பத்திரமாக மீட்ட காவல்துறையினர் உடனடியாக முதலுதவி செய்தனர். பின்னர் ஒரத்தநாடு தாலுகா அலுவலகம் அழைத்துச் சென்று அவரிடம் மேலும் விசாரணை செய்தனர். மேலும், 'அவரது மாமாவான அந்தோணி தாஸிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய முறையில் மின்சார இணைப்பு கொடுக்கப்படும்' என அவரிடம் உறுதி அளித்ததாக தெரிவிகிறது. ஒரத்தநாடு நகர் பகுதியில் சுமார் மூன்று மணி நேரமாக இளைஞர் ஒருவர் தற்கொலை முயற்சி செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Post a Comment

0 Comments