தூத்துக்குடியில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி முகாம்

Breaking News

header ads

தூத்துக்குடியில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி முகாம்




தூத்துக்குடி மாநகராட்சியில் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையம் மூலம் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி பயிற்சியில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பயிற்சி மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச ஐஏஎஸ் பயிற்சி மையம் ஜின்பாக்டரி சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் செயல்பட்டு வருகிறது. அந்த மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் குரூப்-1 முதல் கட்டத் தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வுக்கு தயராகி வருகின்றனர். மேலும், குரூப்-2 முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, 2019 - 2020 கல்வி ஆண்டுக்கான குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 ஆகிய போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்க உள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இலவச பயிற்சியில் சேரலாம். மேலும் விவரங்களுக்கு 9843335593 என்ற செல்ப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments