தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநாட்டிற்கு எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அழைப்பு..!

Breaking News

header ads

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநாட்டிற்கு எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அழைப்பு..!



தூத்துக்குடியில் எஸ்பி சண்முகநாதன் எம்எல்ஏவை தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் சந்தித்து மாநில மாநாடு விழா அழைப்பிதழை வழங்கினர்.


தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில மாநாடு வரும் ஜூன் 22ம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது. இதில் மூத்த பத்திரிக்கையாளர்கள் 100 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. மேலும், பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பத்திரிக்கையாளர்களின் குழந்தைகளுக்கு பரிசுத் தொகை, சாதனையாளர்களுக்கு விருது  வழங்கப்பட உள்ளது. மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டிலுள்ள ஹோட்டல் பானுபிருந்தாவன் கிரீன் பார்க்கில் நடைபெற்றது.


ஆலோசனை கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் சங்கர், பொருளாளர் ஞானதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த பத்திரிக்கையாளர் குமாரவேல் மாநாடு குறித்த சிறப்புரை ஆற்றினார். தூத்துக்குடி மாநகர் மாவட்டத்தில் இருந்து அனைத்து உறுப்பினர்களும் மாநாட்டில் கலந்து கொள்வது, மாநாட்டு சிறப்பு மலர் வெளியிடுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.


இதையடுத்து முக்கிய பிரமுகர்களுக்கு மாநாடு அழைப்பிதழ் வழங்கும் பணி தொடங்கியது. ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ எஸ்பி சண்முகநாதனிடம் நிர்வாகிகள் மாநாட்டு அழைப்பிதழ் வழங்கி  சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில், முக்கிய நிர்வாகிகள் முத்துபாண்டி, விஜயராஜ், வள்ளிராஜ், நடராஜன் , இபுன், நீதிராஜன், முத்துமாடசாமி, கருப்பசாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments