அம்மா குடிநீர் விற்பணை நேரத்தை நீட்டிக்க வேண்டும் - பயணிகள் கோரிக்கை..!

Breaking News

header ads

அம்மா குடிநீர் விற்பணை நேரத்தை நீட்டிக்க வேண்டும் - பயணிகள் கோரிக்கை..!



தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா குடிநீர் பாட்டில் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமது தலைமையிலான அரசு ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நிதிச் சுமையை ஓரளவு குறைக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவும் வழிவகுக்கும் பொருட்டு, கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று, "அம்மா மினரல் வாட்டர் " திட்டத்தை அன்றைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

அதன்படி,  தமிழகம் முழுவதும் ,நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்து நிலையங்களிலும்,  மாவட்டங்களில் உள்ள புறநகர் பேருந்து நிலையங்களிலும் ,அரசுப் போக்குவரத்து கழக நிறுவனங்களினால் 10 ரூபாய்க்கு " அம்மா மினரல் வாட்டர் " 1 லிட்டர் பாட்டில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

Image result for tuticorin amma water

இந்நிலையில்,தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா குடிநீர் விற்பனை நிலையமானது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படுகிறது.பொதுமக்கள் அதிகம் பயணம் மேற்கொள்ளக்கூடிய நேரமான மாலை 6 மணி முதல் இரவு 10 வரை வரையிலும் அம்மா குடிநீர் விற்பனை நேரத்தை நீட்டிக்க அரசுபோக்குவரத்து கழகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் தரப்பின் எதிர்பார்ப்பும்,  கோரிக்கையாகவும் உள்ளது.

இதுகுறித்து புதிய பேருந்து நிலைய அலுவலகத்தில் இருந்த தூத்துக்குடி கிழக்கு கோட்ட  மேலாளர் கண்ணன் அவர்களிடம் கேட்தற்கு,  பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்ற  நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார்.

Post a Comment

0 Comments