
நாட்டின் பாதுகாப்பு, ஜம்மு காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இதில் கேரளா ஆளுநர் சதாசிவம் ,புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி,மகாராஷ்டிரா ஆளுநர் வித்யா சாகர் ராவ்,உள்ளிட்டோரிடம் அந்தந்த மாநில பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார்.அதேபோல் உள்துறை மற்றும் உளவுத்துறை செயலரிடமும் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் தீவிரவாதம் சில பகுதிகளில் ஏற்பட்டு மக்களை அச்சுறுத்தி வருவதாக கூறினார்.ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்து எதுவும் பேச வில்லை என சதய பால் மாலிக் செய்தியாளர்களிடம் கூறினார்.


0 Comments