சிக்கிம் மாநில வெள்ளப்பெருக்கில் - 300 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு..!

Breaking News

header ads

சிக்கிம் மாநில வெள்ளப்பெருக்கில் - 300 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு..!



சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது .ஆறுகளில் கடும் வெள்ள பேருக்கு ஏற்பட்டுள்ளது.
டீஸ்டா நதியில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை வெள்ளம் காரணமாக சங்தாங்-லச்சென்- தாங்கு இடையே பல்வேறு பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜிமா பகுதியில் சுற்றுலா சென்ற சுமார் 300 சுற்றுலாப் பயணிகள், கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதியைவிட்டு வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்டு லச்சென் பகுதிக்கு அனுப்பி வைப்பதற்கான பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு சிக்கிமில் மோசமான வானிலை நிலவுவதால், லச்சென், லச்சங், டிசோங்கு ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments