இந்தியாவின் 2-வது அதிவிரைவு ரயிலில் திடீர் தீ விபத்து..!

Breaking News

header ads

இந்தியாவின் 2-வது அதிவிரைவு ரயிலில் திடீர் தீ விபத்து..!



அசாம் மாநிலம், சில்சாரிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென  தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்ட்டது.

இந்தியா நாட்டின் 2வது அதிவிரைவு ரயில் சில்சார்- திருவனந்தபுரம் இடையே இயக்கப்படுகிறது. தொடர்ச்சியாக 76 மணி நேரம் இயக்கப்படும் இந்த ரயில், இன்று காலை சில்சார் ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தபோது, திடீரென அதன் 3 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன .


இதனை பார்த்த அச்சம் அடைந்த பலர், கையில் வைத்திருந்த பாட்டில் நீரை கொண்டு அணைக்க முற்பட்டனர். அதற்குள் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் சிறிது நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் உணவு பொருட்கள் வைத்திருக்கும் பேன்ட்ரி கார் பெட்டியிலிருந்து தீ, அருகிலுள்ள இரு பெட்டிகளுக்கும் பரவியதாக தெரிவிக்கப்பட்டது. இதில் யாருக்கும் காயமில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள், விபத்துக்கான காரணம் குறித்து வ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Post a Comment

0 Comments