தூத்துக்குடி ஜூன் 11 :-
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தூத்துக்குடி மாநகர் புறநகர் ஒருங்கிணைந்த பேரவை கூட்டம் அரசு ஊழியர் சங்கத்தில் வைத்து ஞாயிறன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் உமா சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் டேனியல் ராஜ் துவக்கி வைத்து பேசினார்.
இதில் 2019 2020 ஆம் ஆண்டுக்கான உறுப்பினர் பதிவு, கல்வி வேலை மற்றும் அடிப்படை பிரச்சனைகளுக்கான இயக்கம் நடத்துவது சம்பந்தமான விவாதிக்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் எம் எஸ் முத்து மாநில செயற்குழு உறுப்பினர் பி உச்சிமாகாளி சிறப்புரை ஆற்றினார்கள் .
ஜூன் 13 நீட்டுக்கு எதிரான இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது .
இதில் மாநகர் குழு உறுப்பினர்கள் கண்ணன். பாலா. ஜேம்ஸ் .மற்றும் புறநகர் குழு உறுப்பினர்கள் வன்னிய ராஜா, உதயகுமார், முத்துராஜா ,பிரவுன்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.




0 Comments