லோக்சபா தேர்தல் தோல்வி அதிமுகவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக மத்திய அமைச்சர் பதவி யாருக்கு என்பது தொடர்பாக இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டதால் யாருக்கும் பதவி வழங்கப்படவில்லை. இந் பிரச்சனையில் தன்னையும், தனது மகனையும் இபிஎஸ் பழிவாங்கி விட்டதாக ஓபிஎஸ் அதிருப்தியில் உள்ளார்.

இந்நிலையில் நேற்று மதுரை எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அளித்த பேட்டியில் அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் சரியாக இருக்கும் என்று ஓபிஎஸ்சை தாக்கி பேட்டி அளித்தார். இதன் தொடர்ச்சியாக குன்னம் எம்எம்ஏ ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள வீடியோவில் ஓபிஎஸ் இன்னொரு சசிகலா என கூறியிருந்தார். இப்படியாக அதிமுகவில் கோஷ்டி பூசல் தொடர்பாக வெளிப்படையாக பேச தொடங்கியுள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 12ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



0 Comments