தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பழைய காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் முருகன் மகன் சீனிவாசன் (42). என்பவரிடம் நடுவப்பட்டி சிங்காரத் தோப்பு பகுதியைச் சேர்ந்த சிவமோகன்ராஜ் (43), அவரது மனைவி சுந்தரலெட்சுமி (35), அவரது தந்தை முருகேசன் (68) ஆகிய மூவரும் சேர்ந்து ரூ.12 லட்சம் கடன் வாங்கி உள்ளனர் . பின்னர் அந்த கடனை திருப்பித் தரவில்லை.
இதற்கிடையில் சிவமோகன்ராஜ் குடும்பத்தினர் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர் . இதையடுத்து சீனிவாசன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் . அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு எஸ்ஐ ரோஸ் மேரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவாக உள்ள சிவமோகன்ராஜ், அவரது மனைவி உட்பட 3பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.



0 Comments