திண்டுக்கல் அருகே செய்தியாளர் மீது தாக்குதல் !போலீசார் குவிப்பு..!

Breaking News

header ads

திண்டுக்கல் அருகே செய்தியாளர் மீது தாக்குதல் !போலீசார் குவிப்பு..!

Image result for journalist attackedதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலூக்காசெந்துறை அருகே  தனியார் வெள்ளரி கம்பெனியில் இருந்து கழிவு நீர் ஏற்படுவதால் தொழுநோய் ஏற்படும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது இதனால் பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நல்ல பிச்சம் பட்டியில்  எவர் கிரீன் என்னும் வெள்ளரி கம்பெனி இயங்கி வருகிறது. இதன் உரிமையாளராக வீரையா என்பவர்  இவர் நத்தம்  தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம் உறவினர் என தன்னை கூறிக் கொண்டு அப்பகுதியில் வெள்ளரி  கம்பனி நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த வெள்ளரி கம்பெனியில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதால்  அப்பகுதியை சுற்றியுள்ள விவசாயம் முற்றிலும் அழிந்து வருகிறது.
மேலும் நிலத்தடி நீர் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால்  அப்பகுதியில் தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தொழுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம்  அப்பகுதி பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர் உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் வினய் உறுதி  அளித்து ள்ளார். இதனால் ஆத்திர மடைந்த வெள்ளரி கம்பெனி உரிமையாளர்  அப்பகுதி பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்டார் மேலும் வெளியூர்களில் இருந்து குண்டர்களை அழைத்து வந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள்கடந்த மே 13 அன்று  அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து செய்தி சேகரிக்க  தனியார்  தொலைக்காட்சி செய்தியாளர்கள் சென்றனர். வெள்ளரி கம்பெனியை படம் பிடித்து கொண்டிருந்த போது உரிமையாளர் வீரையா  செய்தியாளரை கடுமையாக தாக்கினார்.
படுகாயம் அடைந்த செய்தியாளர் செந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான  சூழ்நிலை வருகிறது. இதனால் அப்பகுதியில்  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments