நான் பிரதமராக பேசுவது இதுவே கடைசி முறை-பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்

Breaking News

header ads

நான் பிரதமராக பேசுவது இதுவே கடைசி முறை-பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்

இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்.அதில் அவர் பேசுகையில்,  புல்வாமா தாக்குதலில் வீரர்களின் உயிர்த்தியாகத்தால் நாட்டுமக்கள் துயரமும் கோபமும் அடைந்துள்ளனர். வேறுபாடுகளை மறந்து பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை உறுதியாக வைக்க வேண்டும்.ராணுவ வீரர்களின் தியாகம், பயங்கரவாதத்தை தூக்கி எறிந்து நம்மை பலப்படுத்தும்.
இந்தியா கேட் மற்றும் அமர் ஜவான் ஜோதி பகுதிகளில் புதிய தேசிய போர் நினைவிடம் கட்டப்படும்.மதுரை சின்னப்பிள்ளை, களஞ்சியம் என்ற அமைப்பு மூலம் அடித்தட்டு மக்கள் முன்னேற வழி செய்தார்.வரும் மக்களவை தேர்தலில் வேட்பாளராக நானும் போட்டியிடுவேன்.நான் பிரதமராக மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசுவது இதுவே கடைசி முறை ஆகும். தேர்தல் வர இருப்பதால் 3 மாதங்களுக்குப் பிறகுதான் மான் கி பாத்தில் பேச முடியும் என்றும் பிரதமர் நரேந்திரமோடி உருக்கமாக பேசியுள்ளார்.

Post a Comment

0 Comments