கார் விபத்தில் சிக்கிய மற்றொரு அதிமுக எம்.பி!!அதிர்ச்சியில் தொண்டர்கள்!!

Breaking News

header ads

கார் விபத்தில் சிக்கிய மற்றொரு அதிமுக எம்.பி!!அதிர்ச்சியில் தொண்டர்கள்!!


அதிமுக மக்களவை உறுப்பினர் ராஜேந்திரன்  திண்டிவனம் அருகே உள்ளே தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  பின்னர் அங்கிருந்து காரில் சென்னை சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம் அருகே சென்றுகொண்டிருந்தபோது அவரது கார் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.இதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Image result for கள்ளக்குறிச்சி எம்.பி., காமராஜ்
இந்நிலையில் இன்று அரசு விழாவிற்கு வந்த கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் காமராஜ்  சேலம், வாழப்பாடி அருகே மின்னாம்பள்ளி அருகே வந்துகொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக காரின் டயர் வெடித்தது.இதனால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதனால் தனியார் மருத்துவமனையில் மக்களவை உறுப்பினர் காமராஜ் மற்றும் ஓட்டுநர்  சிறு காயங்களுடன் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அதிமுக நிர்வாகிகள்  தொடர்ந்து விபத்தில் சிக்குவது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments