தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி டீன் விருதுநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி டீன் ஆக திருவாசகமணி பணியாற்றி வந்தார். இவர் நேற்றிரவு திடீரென விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி டீன் ஆக ரேவதி இன்று பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி டீன் ஆக இருந்த திருவாசகமணி கடந்த பல மாதங்களாக இங்கு பணியாற்றி வந்தார். அப்போது பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை என்று புகார் கூறப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் ,தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி முடிந்து செல்லும் 130 டாக்டர்கள் தங்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என டீன் திருவாசகத்திடம் கூறியுள்ளனர்.
அதற்கு பொதுமக்களுக்கு பரிசோதனை நடத்த தான் பரிசோதனை கிட்டை அரசு ஒதுக்கியுள்ளது.ஆகவே அனைவருக்கும் நெகடிவ் என எழுதி அனுப்ப சொல்லும் வீடியோ காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த கிட் ஒன்றின் விலை ரூபாய் 4500 ஆகும் .கூடுதலாக மருத்துவ பரிசோதனைக்கு வந்தால் மட்டுமே பயிற்சி முடித்த மருத்துவர்களுக்கு பரிசோதனை நடத்த முடியும் என்று திருவாசகமணி உறுதியாக தெரிவித்து விட்டார்.
இப்பிரச்சனை, கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து டீன் திருவாசகமணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

0 Comments