தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கரோனா பாதிப்பு..!

Breaking News

header ads

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் ஒரே நாளில் 798 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டி விட்டது. தமிழகத்தில் மேலும் 6 பேர் இறந்ததால், கொரோனா உயிர்ப்பலி 53 ஆக உயர்ந்தது.

முன் எப்போதும் இல்லாத அளவில், கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் தமிழகத்தை உலுக்கி வருகிறது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாள்தோறும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 798 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டி விட்டது.

வைரஸ் தொற்றால் உறுதி ஆனவர்களில் 5 ஆயிரத்து 895 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். 4 ஆயிரத்து 273 பேர் தனிமை வார்டுகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

ஒரே நாளில் 6 பேரை கொரோனா காவு வாங்கியதால், உயிர்ப்பலி 53 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை ஆய்வு மையங்களின் எண்ணிக்கை 53 ஆக நீடிக்கிறது.

கொரோனாவில் இருந்து மேலும் 92 பேர் குணமடைய , இதுவரை 2 ஆயிரத்து 51 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஒரே நாளில் பலியான 6 பேரில் 4 பேர் பெண்கள். சென்னையை சேர்ந்த 50 வயது ஆண், 67 வயது பெண், 36 வயது மற்றொரு பெண் ஆகியோர் ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையிலும், 66 வயது பெண் ஒருவர், சென்னை தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கடலூரை சேர்ந்த 32 வயது பெண் ஒருவரும், சென்னை - ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மரணம் அடைந்தார். 65 வயது ஆண் ஒருவர், கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். தமிழகத்தில் இதுவரை கொரோனா காவு வாங்கிய 53 பேரில், 32 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.

Post a Comment

0 Comments